யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்ட்ட நிலையில் சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(15) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த வாரம் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்து அவர் வைத்திருந்த மூன்றரைப் பவுண் நகையை மீட்ட யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்தினர்.
இந்நிலையில், பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.