நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸிலேயே அவுட் ஆன இந்தியா!

tubetamil
0

 நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்ற நிலையில்  இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்றைய தினம் தொடங்க இருந்தது.



எனினும் தொடர் மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


குறித்த இதேவேளை நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துது. சுப்மன்கில் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. அவரது இடத்தில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. 3 சுழற்பந்து வீரர் களுடன் இந்திய அணி களம் இறங்கியது. அஸ்வின், ஜடேஜா வுடன் குல்தீப் யாதவ் இடம் பெற்றார்.


மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் 7-வது ஓவரில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 9 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரூர்கி பந்தில் அவுட் ஆகி ஏமாற்றினார்.


அடுத்து வந்த சர்ஃபராஸ் கானும் ரன் ஏதும் எடுக்கமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனால், இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இன்றைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 13 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.


பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாம் நாளின் உணவு இடைவேலை வரை முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுளை இழந்துள்ளது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.


இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஷ்வின் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் ரூர்கி 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும் டிம் சௌதி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top