மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று இரவு வந்த தொலைபேசிஅழைப்பை அடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக்க தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டித்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன் இன்றிருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.