இலங்கையில் அநுர அலை..!

tubetamil
0

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்து புதிய அரசாங்கம் பொறுப்பேற்று நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்துள்ளன.  இதுவரை நாட்களும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில், அதுவும் குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வருடத் தேர்தலில் அந்த மரபினை பொதுமக்கள் மாற்றியமைத்துள்ளனர்.

பெரும்பான்மை வாக்குகள் இல்லாத ஒரு ஜனாதிபதி, வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படாத ஒரு கட்சியின் வெற்றி என அனைத்துமே புதியதாய் இருக்கின்றது. உண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு அவருடைய பிரசார உத்திகள், சிறந்த காய் நகர்த்தல்கள், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் காரணமாக இருப்பினும் இவை அனைத்தையும் தாண்டி கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளும் மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளன.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு, விரக்தி, எதிர்போட்டியாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாசவின் அணுகுமுறைகள்,  சஜித் வெற்றிபெறக் கூடாது என்பதில் ரணில் காட்டிய  அதீத முயற்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன. 

பொருளாதாரத்தை முதன்மைப்படுத்திய ரணிலின் பிரசாரங்களின் ஊடாக அவர்  அடிமட்ட மக்களின் மன நிலையில் இருந்து சிந்திக்கவில்லையோ என்று தோன்றுகின்றது. 

அதேசமயம், இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு பிரதானமாக சிங்களவர்களின் வாக்குகளே முதன்மையானது. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு களமிறங்கிய சஜித் பிரேமதாசவுக்கு  கிடைத்த தமிழர்களின் வாக்குகளை இம்முறையும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியை சஜித் எடுத்தாரே தவிர சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள தவறிவிட்டார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

இவ்வாறான  சில அடிப்படை காரணங்கள் சஜித் மற்றும் ரணிலின்  தோல்விக்கு வித்திட்டதுடன் அதுவே அநுரவின் வெற்றிக்கும் வழி வகுத்திருக்கின்றது. 

இது இவ்வாறிருக்க,  நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்று தனது அணியில் இருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு புதிய அமைச்சரவையையும் உருவாக்கி அடுத்த தேர்தலுக்கும் தயாராகிவிட்டார் அநுர.

பதவி ஏற்ற மறுதினம் இரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.  தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டியவர்கள் என தான் கருதுவதாகவும், எனவே நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்தார்.

இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் | Anura S New Government In Sri Lanka

புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட அநுரவின் முன்னால் பல்வேறு சவால்கள் உள்ளன.  ஊழல்வாதிகளை கைது செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவது, மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு, குறிப்பாக சம்பள உயர்வு, மானியம்,  அதிகரித்துள்ள வாழ்க்கைச்சுமைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல சவால்களுக்கு அநுர அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. 

இவை அனைத்திற்கும் முதன்மையாக தற்போது 3 பேராக அமைந்துள்ள தனது குறுகிய அமைச்சரவையை விரிவுபடுத்துவதற்கும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஒரு நிலையான அரசாங்கத்தை நிறுவி  ஆட்சியை முன்கொண்டு செல்ல வேண்டிய  மிகப்பெரிய பொறுப்பு அநுர சார் குழுவினரிடம் உள்ளது.

கடந்த 23ஆம் திகதி இலங்கை நாட்டினுடைய 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்ற காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு அரசியல் நகர்வுகளை  அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top