யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவ சோதனை சாவடியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பியோலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று (13) இடம்பெற்றுள்துடன் இந்த விபத்து சம்பவமானது சோதனைச்சாவடியில் இரவு வேளையில் தெளிவாக இனங்காணக்கூடிய மின் விளக்கு சமிக்ஞைகள் இன்மையால் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விபத்தின் போது காயமடைந்த உந்துருளி, மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.