மலேசியாவிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் றுஞ்செய்தி ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பி வைத்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியை விசிட் விசா மூலம் மலேசியா சென்று அந்த விசாவை தொழில் விசாவாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மோசடிகாரர்கள் மனித கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சட்டவிரோத சதி வலையில் சிக்க வேண்டாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விசிட் விசாவில் செல்வோர் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.