ஹமாஸ் அமைப்பின் தலைவர் மரணித்திருந்தாலும், அவர்களது இலக்கானது ஈரானின் ஆதரவுடனும், புதிய தலைமையுடனும் பல மடங்காக தொடரும் என அந்நாட்டின் அதிபர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஹமாஸ் அடைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு அலி கமேனி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள இரங்கல் பதிவிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சின்வாரின் மரணம் இஸ்ரேலின் எதிர்ப்பு குழுக்களுக்கும், ஹமாஸ் உட்பட ஈரான் ஆதரவு பிராந்திய பிரதிநிதிகளின் வலையமைப்புக்கும் பாரிய இழப்பாகும்.
இழப்பு மிகப்பெரியது என்றாலும் எமது நடவடிக்கைகள் தொடரும்.
பல ஆண்டுகளாக முந்தைய ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் பலிவாங்கியிருந்தாலும், தமது முன்னேற்றத்தை அந்த அமைப்பு ஒருபோதும் நிறுத்தவில்லை.
அதேபோல், தற்போதைய சின்வாரின் மரணம் தியாகமே தவிர, ஹமாஸிற்கான பின்னடைவல்ல.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக சின்வாரைப் பாராட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.