ஐ.எம்.எப் மிகைக்கட்டண நாடுகளின் பட்டியலில் இலங்கை நீக்கம்!

tubetamil
0

கடனளிப்பவர்கள் தரப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் மிகைக்கட்டண (surcharge) நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 


இதற்காக சர்வதேச நாணய நிதியம், அண்மையில் இதற்கான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மிகைக்கட்டணங்களை எதிர்கொள்ளும் 22 கடன்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது.


சர்வதேச நாணய நிதியம் தற்போது கடன் வாங்கும் 52 உறுப்பு நாடுகளில், 19 நாடுகள் மிகைக்கட்டணங்களை கொண்ட நாடுகளாகும்.


இந்தநிலையில் 2024 நவம்பர் 1, முதல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், மிகைக்கட்டணங்களை செலுத்தும் நாடுகளின் எண்ணிக்கை 19 இல் இருந்து 11 ஆக குறையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


இதன்படி பெனின், கோட் டி ஐவரி, காபோன், ஜோர்ஜியா, மோல்டோவா, செனகல், கரினாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக நிதியம் தெரிவித்துள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top