மாற்று விரலில் மைப் பூசுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம்

tubetamil
0

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சிறுவிரலில் அடையாளம் இடப்பட்டது.


ஜனாதிபதி தேர்தலில் சிறுவிரலில் இடப்பட்ட மை, இன்னும் சிலருக்கு நீங்காத நிலையில், தற்போது ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top