இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக்குழு முன்னாள் ஜனாதிபதிகள் சிறப்புரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த இதேவேளை இதன்படி ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அரர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டமூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம், உத்தியோகபூர்வ வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளருக்கான உரிமை மட்டுமே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.