எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா ''வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்கலாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.