களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் சுகயீனமுற்ற மாணவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் போது ஏற்படும் அச்சம் காரணமாகச் சிறுவர்களுக்கு சிறு மயக்க நிலை போன்ற குறுகிய காலப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
HPV தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது