இந்தியாவின் பிரபல பங்குச்சந்தை முதலீட்டில் பெண்மணி ஒருவர் வெறும் 10 நிமிடங்களில் பெண்மணி ஒருவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரி ஆகியுள்ளார்.
இந்தியாவின் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ரேகா ஜூன்ஜூன்வாலா எனும் பெண்மணியே இந்த சாதனைக்கு சொந்த காரியாகியுள்ளார்.
நவம்பர் 26 -ம் திகதி இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது அமர்வாக தங்கள் ஏற்றத்தை தொடர்ந்தன. இதில், பிரபல முதலீட்டாளரான ரேகா ஜுன்ஜுன்வாலா இந்திய மதிப்பில் 105 கோடியை சம்பாதித்துள்ளார்.
இந்த இரு நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்து மிகக் குறுகிய காலத்தில் கணிசமான தொகையால் அவரது நிகர மதிப்பு உயர்ந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் டைட்டன் நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.20.90 உயர்ந்து, ரூ.3,310 தொடக்க விலையிலிருந்து ரூ.3,330ஐ எட்டியது.
ரேகா ஜுன்ஜுன்வாலா டைட்டனில் 4.57 கோடிக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார். எனவே டைட்டனின் பங்கு விலை உயர்வால் வெறும் 10 நிமிடங்களில் அவரது நிகர மதிப்பில் ரூ.95.54 கோடியை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இதே வேளை மெட்ரோ பிராண்ட்ஸ் பங்கு ஒன்றுக்கு ரூ.3.90 அதிகரித்து, ஆரம்ப வர்த்தகத்தில் ரூ.1,177.10 என்ற தொடக்க விலையில் இருந்து ரூ.1,180.95ஐ எட்டியது.
ரேகா ஜுன்ஜுன்வாலா மெட்ரோ பிராண்டுகளின் 2.61 கோடி பங்குகளை வைத்துள்ளார். இந்த விலை ஏற்றத்தால் அவரது நிகர மதிப்பு ரூ.10.18 கோடி அதிகரித்துள்ளது.
டைட்டன் மற்றும் மெட்ரோ பிராண்ட்கள் இரண்டின் லாபத்தை சேர்த்து, ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு வர்த்தகம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் ரூ.105.72 கோடி அதிகரித்துள்மை குறிப்பிடத்தக்கது.