இரணை குளத்தின் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு - மக்களின் வீடுகளுக்குள் பாய்ந்த வெள்ளம்

tubetamil
0

 வடக்கின் மிக பெரிய குளமாக  இரணைமடுக்குளத்தின்  14 வான் கதவுகளும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.




இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் இந்த குளம் இரணைமடு குளம் என அழைக்கப்படுகிறது.




கனடா-பிரித்தானிய அதிகாரியான சேர் ஹென்றி பாட் 1885 ஆட்சிக்காலத்தில் இந்த குள  கட்டு மானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள போதிலும் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த குளத்தின் முழு கட்டுமான பணிகளும் நிறைவுற்றது. 



 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் சுமார். 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறுகின்றது.




தற்போது வடக்கில்  பெய்து வரும் கடும் மழை  காரணமாக இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக  பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.




கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக 


அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அந்த வகையில் 1043 குடும்பங்களைச் சேர்ந்த 3524 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் வட்டக்கச்சி ஊடாக கண்டாவளை செல்லும் பிரதான வீதியில் புளியம்போக்கனை பகுதியில் வீதி குறுக்கரத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டககச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top