வன்னியில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் 466 உட்பட 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு உள்ளடக்கிய வன்னித் தோதல் தொகுதியில் 3 இலட்சத்து 6 ஆயிரத்து 81 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 140 பேர் வாக்களித்துள்ளனர்
அதில் தபால் மூல வாக்களிப்பு 466 உட்பட 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 95 ஆயிரத்து 886 வாக்குகள் ஏற்றுக் கொள்ளபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.