எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,794 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்ஏ குறித்த தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 428 முறைப்பாடுகளும்,
மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,313 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.