பாகிஸ்தானில் உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் இன்று (09) காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன .
அத்துடன்தொடருந்து நிலையத்தின் முன்பதிவு அலுவலகத்தில் தொடருந்து நடைமேடைக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வும் தெரிவிக்கப்படுகிறது.