பொதுத் தேர்தலுக்காக இன்று (13) மற்றும் நாளை (14) தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேரூந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கு 1017 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்காக 290 இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள 107 இ.போ.ச டிப்போக்களில் இருந்து இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 700 தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.