ஐபிஎல் 2025 ஏலபட்டியலில் இடம்பிடித்த 29 இலங்கை வீரர்கள்

tubetamil
0

 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது.



அதநடிப்படையில் 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்லத்துடன் இதில் வெளிநாட்டு வீரர்களாக, 29 இலங்கை வீரர்களும் காணப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.


இதனை தவிர ஆப்கானிஸ்தானின் 29 பேரும்,அவுஸ்திரேலியாவின் 76 பேரும், பங்களாதேஸின் 13 பேரும், கனடாவின் 3 பேரும், இங்கிலாந்தின் 52 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன், அயர்லாந்தின் 9 பேரும் இத்தாலியின் 1 வீரரும், நெதர்லாந்தின் 1 வீரரும் , நியூஸிலாந்தின் 39 பேரும், ஸ்கொட்லாந்தின் 2 பேரும், தென்னாபிரிக்காவின் 91 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் 1 வீரரும், அமெரிக்காவின் 10 பேரும், மேற்கிந்திய தீவுகளின் 33 பேரும், சிம்பாப்வேயின் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.


இந்தநிலையில், சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top