இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகில் வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது இலங்கையர்களும் நெடுந்தீவு கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அண்மையில் தமிழகத்திற்கு சட்டவிரோதமாகச் சென்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.