தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி ஆகும் . இந்த படம் 2007ல் ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் பூல் புலயா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஜோதிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.
இந்தப் படம் அப்போதே வெற்றி படமாக அமைந்தாலும் கூட 15 வருட இடைவெளி விட்டு இதன் இரண்டாம் பாகம் பூல் புலையா-2 என்கிற பெயரில் வெளியானது.
இதில் கார்த்திக் ஆர்யன் நாயகனாக நடித்திருந்தார்.
தற்போது அதன் தொடர்ச்சியாக கார்த்திக் ஆர்யனின் பூல் புலையா 3 வெளியாகியுள்ளது
இந்த படத்துடன் இந்த மாதம் பல படங்கள் வந்தாலும், இந்தப் படத்தின் வசூல் இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இப்படம் நேற்றைய தினம் ரூ.2 கோடி ஈட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கம் அகெய்ன், கங்குவா, தி சபர்மதி ரிப்போர்ட் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப்படத்தின் மொத்த வசூல் 235.25 கோடியை எட்டியுள்லதாவும் தெரிவிக்கப்படுகிறது.