இந்த வருடம் அரண்மனை 4 எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சுந்தர் சி அடுத்து இயக்கப்போகும் படம் என்ன என்பது குறித்து கேள்வி எழுந்த நிலையில், கேங்கர்ஸ் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளதுடன் வடிவேலு இப்படத்தில் சுந்தர் சி உடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், கலகலப்பு 3 குறித்து சுந்தர் சி-யின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், சுந்தர் சி மற்றும் தயாரிப்பாளர் கண்ணா ரவி கூட்டணியில் கலகலப்பு 3 உருவாகவுள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என பதிவிட்டுள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என குறிப்பிடும் வகையில் '2025' என்றும் இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.