நாட்டின் 5 மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்று (01) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுகள் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளன.
தீபாவளி பண்டிகை நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் , இந்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் 9 ஆம் திகதி முன்னெடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.