பிரபல ஜோடி ஒன்றின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி யுள்ளதாக கூறப்படுகிறது.
அது வேறு யாருமில்லை நடிகர் நாக சைத்தன்யா-சோபிதா வின் திருமணம் வரும் டிசம்பர் 4ம் திகதி இடம்பெறவுள்ளது.
சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, திருமணமும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.