இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது கடலட்டைகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் சுழியோடியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1055 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் மற்றும் பிடிக்கப்பட்ட கடலட்டைகளையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது