மட்டக்களப்பு - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி - சின்னப்பாலம் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் காணாமல் போயிருந்த 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம் (28) மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.
இந்தநிலையில் , வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.