நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் கிடைத்த நிலையில், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் அடிவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ய தவறிய காரணத்தினால், கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் 7 நாட்களில் உலகளவில் ரூ. 97 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.