யாழ்ப்பாணம் (Jaffna) கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்த விநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தமையால் அந்த பகுதியில் பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது
மழை காரணமாக முதலை ஊருக்குள் வந்திருக்குமா? என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.