உலகிலுள்ள 9 நாடுகளின் குடிமக்களுக்கு வீசா இல்லாமல் அனுமதியளிக்க சீன வெளிவிவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் தென் கொரியா, நோர்வே, பின்லாந்து உட்பட, ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கே சீனா இந்த அனுமதியளித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் இந்த முடிவானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீன அரசாங்கத்தின் இந்த முடிவானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எநாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதே வேளை , தொழில் ரீதியாகவும், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு அல்லது சீனா வழியாக வீசா இன்றி 15 நாட்களுக்குள் வேறு நாடுகளுக்கு பயணப்படவும் சீனா அனுமதி அளிப்பதுடன் ன்மார்க், கிரீஸ், போர்த்துகல் உட்பட 18 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்கனவே சீனா வீசா இல்லா அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஜூலை மாதம், போலந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் இறுதி வரை சீனாவிற்கு தடையின்றி நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்