தீபாவளிக்கு வெளிவந்த அமரன் படம் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ள்ள நிலையில் இதுவரை ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவான இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்து இருந்தார்.
மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெற்றியடைந்துள்ளது.
இதே வேளை 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளது. நாளை ரூ. 100 கோடியை கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.