அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஈரான் தீவிர வாத அமைப்பு அல்ல என தெரிய வந்துள்ளது.
இது குறித்து மெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே குறித்த விடயம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இது குறிஅறுகம்பே பதற்றத்தின் பின்னணியில் செயற்பட்ட குழு - விசாரணையில் அம்பலம் !
த்து கலந்துரையாடினர்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட தலைவர்கள் மற்றும் குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த இதேவேளை இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடம், தீவிரவாதக் கருத்துக்காக இப்படியொரு குழு எப்படி தம்மைக் கொல்ல முடியும் என்று கேட்டனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயண ஆலோசனை ஏன் விதிக்கப்பட்டது என்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இலங்கை பிரதிநிதிகள் வினவியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.