வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது மாமியாரின் வாயில் சுட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றயதினம் (04) இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈச்சங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.