தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி - அனுர தரப்பு விளக்கம்!

tubetamil
0

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.



நேற்றையதினம் (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மெர்க்கண்மடவாறு தெரிவித்துள்ளார். 


குறித்த விடயம் தொடர்ப்பில்  மேலும் அவர் தெரிவிக்கையில், 


ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.


இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர் என டில்வின் சில்வா சுட்டிக்காட்டியள்ளார்.


எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top