சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa) இடையில் நேற்று (13) நடைபெற்ற மூன்றாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். திலக் வர்மா 56 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றார்.
இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான 20க்கு20 போட்டி நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.