கிளிநொச்சிமாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பெரும் போகத்திற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 127.191 மில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 2024 /2025 பெரும் போக பயிர் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான உரமானியத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறது
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள 9064 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 127.191 மில்லியன் ரூபா வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அத்துடன் பூநகரி, இராமநாதபுரம், புளியம்பக்கணை, பரந்தன், கண்டாவளை, முழங்காவில், பளை, கிளிநொச்சி ஆகிய கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள குறித்த செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.