இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படவுள்ளதாகவும் சொகுசு வாகனங்கள் கொடுக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதே வேளை கடந்த அரச அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை பெருந்தொகையான பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிட்டு சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.