உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் விமானமே நேற்று கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் தோஹா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.