தமிழில் சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்தவர் தான் நடிகர் தாகூர் அனூப் சிங்க். கட்டு மஸ்தான தேக கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்ட இவர் ஆரம்பத்தில் மகாபாரதம் உள்ளிட்ட சீரியல் நாடகங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் இவர் நடித்துள்ள மஹாபாரதம் சீரியலில் இவர் ஏற்றுக்கொண்ட திருதராஷ்டிரன் கதாபாத்திரம் மக்கள் மனதில் இன்னமும் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் இவர் தமிழில் சிங்கம் 3 படத்தில் வில்லனாக அறிமுகமாயுள்ளதுடன் தெலுங்கு, இந்தி கன்னடம் ஆகிய மொழிகளும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சிங்கம் படத்தை தொடர்ந்து வின்னர் , கொமாண்டோ 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து சிறப்பான இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்தும் வில்லனாக நடித்த அவர் 2019 ஆம் ஆண்டு உச்சக்கட்டம் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் தொடர்ந்தும் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அவர் கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் ஒன்றில் மீண்டும் ஹீரோவாக அறிமுகமாயுள்ளார்.
சத்ரபதி சாம்பாஜி மகராஜ் என்ற படத்திலேயே அவர் சத்ரபதி சாம்பாஜி மகராஜாக அவர் நடித்திட்டுள்ளார்.
துஷார் ஷெலர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா கான்வில்கர்,கிஷோரி ஷஹானே, பார்கவி சிர்முலே, ஆனந்த் பிம்பால்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து கருத்து வெளியிடுகையில்,
'வரும் சந்ததியினர் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, எனது குழந்தைப் பருவத்தில் வரலாற்றுப் புத்தகங்களில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜைப் பற்றிய அத்தியாயமே இல்லை. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில், இந்த கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதை உணர்ந்தேன். இதுபோன்ற கேரக்டர்களில் அதிக படங்கள் எடுக்கப்பட வேண்டும், மேலும் சாம்பாஜி மகாராஜின் படத்தை பார்க்க பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் கடந்த 13 ஆம் திகதி இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=DxEyiYD4aqM