கனடாவில் உள்ள இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ரொறன்ரோவிற்கு அருகாமையில் பிராம்டன் பகுதியில் இந்து ஆலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கே அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த சீக்கிய மதத்தவர்கள் இந்து ஆலயத்திற்கு எதிரில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில்லான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுயுள்ளது.
அத்துடன் இந்திய ராஜதந்திரிகள் கனடாவை விட்டு நாடு கடத்தப்பட்டு சில வாரங்களின் பின்னர் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது குறித்த இந்து ஆலயத்திற்குள் இந்திய ராஜதந்திரிகள் சிலர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமாய் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும் ராஜதந்திரிகள் மீதான அழுத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னடிய அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.