ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என ஸ்வீடன் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் போரில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என அதிபர் விளாடிமிர் புடின் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உக்ரைன் பிரதிநிதி ருஸ்டெம் உமெரோவுடன் ஸ்டாக்ஹோமில் இன்று (23) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான அளவு நிதியுதவியை ஸ்வீடன் அளிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனை ஆதரிப்பதில் இருந்து எங்களைப் பயமுறுத்தும் முயற்சிதான், ரஷ்யாவின் மிரட்டல், அது தோல்வியடையும் என்று பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.