நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 06 இன் படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்க வேண்டும்.
இந்தநிலையில், குறித்த அறிக்கையில் கட்சி/குழு மற்றும் வேட்பாளர் சார்பாக வழங்கப்படும் நன்கொடைகள் அல்லது நன்கொடைகள் பொருளாகப் பெறப்பட்டால், அவற்றின் மதிப்பிடப்பட்ட மதிப்பு அதற்கான அன்பளிப்பு, கடன், முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக நன்கொடையாக அளிக்கப்பட்டதா என்பதைப் பதிவு செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அந்தந்த தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ராஜகிரிய தலைமை அலுவலகத்திலும் காட்சிப்படுத்தப்படும்.
அத்துடன் பதிவேடுகளில் உள்ள தகவல்கள் தவறானவை எனில், எந்த வாக்காளரும் அதை உறுதிப்படுத்த ஆவணங்களுடன் காவல்துறையில் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.