இலங்கையில் (Sri Lanka) மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மின்சாரம், எரிசக்தி துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஜனாதிபதி பேச்சுவார்ததை நடாத்தியுள்ளார்.
இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து, ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால தீர்வின் முக்கியத்துவத்தை இரண்டு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.