2024ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வினை நினைவு கூருவதற்கு தமிழர் தாயக பகுதிகளில் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமையப்பெற்ற இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் அந்த மாவீரர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றன. அதில், முல்லைத்தீவு நகரமும் எழுச்சி கொண்டுள்ளது.
முல்லைத்தீவு நகரத்தின் சுற்றுவட்ட பாதை மற்றும் சந்தைப் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகள் அலங்கரிக்கப்பட்டு, மாவீரர் எழுச்சி நாட்கள் மக்கள் நினைவேழுச்சியுடன் நினைவு கூர தயாராகிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.