எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 99 ஏ பிரிவின் கீழ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தகுதி வாய்ந்த 527 பேரின் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.
அத்துடன் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 27 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 527 தேசியப் பட்டியல் பெயர்களை தேர்தல் வேட்புமனுவுடன் சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 29 பேர் அரசியலமைப்பு 99A இன் படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.