ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்து.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த கூட்டத்தில் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்ட 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பங்குபற்றவுள்ளது.
எனினும் , பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு பத்து பேரைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.