சுற்றுலா இந்திய (India) அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் (South Africa) இடையிலான முதலாவது 20க்கு 20 விக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
டேவனில் நேற்று (08) இடம்பெற்ற இந்த போட்டியின் போது இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை பெற்றது
இதில் சஞ்சு சம்சன் (Sanju Samson) 107 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதனை அடுத்து துடுப்பாடிய தென் ஆப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது
இதன்படி இந்திய அணி 61 ஓட்டங்களால் முதலாவது 20 க்கு 20 போட்டியில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.