இலங்கையின் பல இடங்களில் இன்று பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.
மேலும் குறித்த அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மற்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மின்வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.