டிஆர்பிக்கு பெயர் போன சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக சுந்தரி சீரியல் காணப்படுகிறது.
2 சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு 1120 எபிசோடுகளை எட்டியுள்ளது.
முதல் சீசனில் கேப்ரியல்லா, ஜிஷ்னு மேனன், ஸ்ரீகோபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்ப படுகிறது.
இதில் முதலில் நடித்த கேப்ரியல்லா, ஜிஷ்னு மேனன், ஆகியருடன் தாலாட்டு சீரியலில் நடித்த கிருஷ்ணா மற்றும் லிதன்யா சிவபாலன் ஆகியோர் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான தெறிக்கும் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. சீரியலின் புரொமோ கதையில் முக்கிய கதாபாத்திரமாக இருந்துவந்த அனு வாக நடித்து வந்த ஸ்ரீகோபிகா மீண்டும் எண்ட்ரியாகவுள்ளார்.
புரொமோவை பார்த்த ரசிகர்கள் இந்த தெறிக்கும் எபிசோடை பார்த்தாக வேண்டும் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.