நியூசிலாந்தின் உலக ப்ரீமியர் தொடர் நடுவராக மூதூரை சேர்ந்த நபர் தெரிவு

tubetamil
0

 நியூசிலாந்தின் அவுக்லாந்த் கிரிக்கெட் சபையின் 2025இற்கான ஆடவர் மற்றும் மகளிர் உலக ப்ரீமியர் தொடருக்கான நடுவராக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மூதூர் சிஹான் சுஹூட் தெரிவித்து செய்யப்பட்டுள்ளார்.



இந்த தொடரானது 2024 டிசம்பர் முதல் 2025 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நியூசிலாந்தின் அவுக்லாந்த் மற்றும் வெலிங்க்டன் நகரங்களிலே நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


இதற்கான  இரண்டாம் மற்றும் நொக் அவுட் சுற்றுக்களுக்காவே நடுவர் சிஹான் சுஹூட் அவுக்லாந்த் கிரிக்கட் சபையினால் அழைக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் இந்த தொடரில் பல அனுபவம் வாய்ந்த சர்வதேச நடுவர்கள் பங்குபற்றுகின்றனர்.


குறித்த இதே வேளை  மூதூர் மத்திய கல்லூரி, இ.கி.ச. திருகோணமலை இந்துக் கல்லூரி மற்றும் மாவனல்ல சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான சிஹான் சுஹூட் திருமலை கிரிக்கட் சங்கம் மற்றும் நடுவர்கள் சங்கத்தின் சிரேஸ்ட நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.



2016 தொடக்கம் தேசிய ரீதியாக இலங்கையில் பல மாவட்டங்களிலும் நடுவராக பணியாற்றிய சிஹான் சுஹூட், 2022 இல் இருந்து இன்று வரை கிரிக்கட்டின் முதல்தர நாடுகளில் பிராந்திய மற்றும் முதல்தர போட்டிகளில் நடுவராக பணியாற்ருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top