கேகாலை - வரக்காபொல பகுதியில் இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவரது கணவர் சட்டப்பூர்வமாக அவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவரது கணவர் சட்டப்பூர்வமாக அவரை பிரிந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2019 ஆம் ஆண்டு முதல் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்திபுர பிரதேசத்தில் உள்ள துறவு இல்லம் ஒன்றிற்கு ஜாதகம் பார்ப்பதற்கு குறித்த பெண் வந்து செல்லும் நிலையில், அங்கு திடீரென உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் யிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை கேகாலை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நேற்று (11) நாவக்குளம் பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.